FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நான் சிம்புவின் அம்மாவா? வதந்திகளுக்கு பதில் கொடுத்த ஆண்ட்ரியா!

அரசன் திரைப்படத்தில் சிம்புவின் அம்மா பாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பதாக தகவல் வெளியானது குறித்து...

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 3:23 pm IST
நடிகை ஆண்ட்ரியா - படம்: தினமணி
பகிர்:

"நான் சிம்புவோட அம்மா எல்லாம் இல்லை, நான் சந்திராதான்" என்று 'அரசன்' திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகை ஆண்ட்ரியா பதில் அளித்துள்ளார்.

கோவையில் புதிய நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டார். அப்போது, ரிப்பன் வெட்டி நகைக் கடையைத் திறந்து வைத்த அவர், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பல்வேறு நவீன மற்றும் பாரம்பரிய ரக நகைகளைப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆண்ட்ரியா பேசியதாவது:

Advertisement

Advertisement

"முன்பெல்லாம் அடுக்கடுக்காகப் பாரமான நகைகளை அணிவதுதான் ஃபேஷனாக இருந்தது. ஆனால், இப்போது ட்ரெண்ட் முற்றிலும் மாறி விட்டது. இப்பலாம் அதிக பாரமான நகைகள் யாருக்குமே பிடிப்பது இல்லை.

நகைகள் பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கணும், அதேசமயத்தில் போடுவதற்கு ரொம்ப லைட்டாக இருக்கணும்னுதான் எல்லாரும் விரும்புகிறார்கள்” என்றார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வட சென்னை' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் 'அரசன்' (வடசென்னை 2) திரைப்படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "நான் சிம்புவோட அம்மா இல்லை... நான் சந்திராதான்" என நடிகை ஆண்ட்ரியா நகைச்சுவையாகவும் அதிரடியாகவும் பதில் அளித்தார்.

அரசன் திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் அம்மா பாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பதாகத் தகவல் பரவிய நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

summary

"I am not Simbu's mother or anything like that; I am Chandhra," actress Andrea replied when asked about the movie Arasan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments