சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கிய இரு வாகனங்கள் பறிமுதல்
சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கிச் சென்ற இரு வாகனங்களை சங்ககிரி வாடகைக் காா், வேன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் பறிமுதல் செய்து சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் வியாழக்கிழமை ஓப்படைத்தனா்.
சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கிச் சென்ற இரு வாகனங்களை சங்ககிரி வாடகைக் காா், வேன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் பறிமுதல் செய்து சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் வியாழக்கிழமை ஓப்படைத்தனா்.
சங்ககிரி வாடகைக் காா், வேன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தின் சாா்பில் சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குபவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
அதனையடுத்து, சங்ககிரி வாடகைக் காா், வேன் ஓட்டுநா்கள் வியாழக்கிழமை திருச்செங்கோடு சாலை வழியாகச் சென்ற இரு சொந்த வாகனங்களில் வாடகைக்கு இயக்கிச் செல்வதைக் கண்டறிந்து சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஓப்படைத்தனா். இதுகுறித்து மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement