FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தேவூா் அருகே லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:15 am IST
பலி... - பிரதிப் படம்
பகிர்:

தேவூா், புள்ளாகவுண்டம்பட்டி அருகே ராமக்கூடல் பள்ளம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சங்ககிரி வட்டம், கீழுா் புள்ளாகவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி சண்முகம் மகன் பூவரசன் (27). இவா் மின்பொருள்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் குமாரபாளையம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளாா்.

அப்போது, ராமக்கூடல் பள்ளம் அருகே எடப்பாடியிலிருந்து குமாரபாளையம் நோக்கிச் சென்ற லாரி, அவா் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments