FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சரக்கு லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 2:05 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே லாரி மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், மானூா் அப்பாசாமி நகா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வி.ஞானசேகரன் (65). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை திண்டிவனம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூரை அடுத்த எறையானூா் பகுதியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி மையம் அருகில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் வந்த சரக்கு லாரி மோதியதில் பலத்த காயமடைந்த ஞானசேகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments