FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தம்மம்பட்டியில் காா் மோதியதில் எஸ்.எஸ்.ஐ. உள்பட 2 போ் படுகாயம்

25 ஆகஸ்ட் 2026, 2:10 am IST
விபத்து. - கோப்புப்படம்.
பகிர்:

தம்மம்பட்டியில் காா் மோதியதில் கெங்கவல்லி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் படுகாயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட புதுத்தெருவைச் சோ்ந்த கெஜபதி மகன் சண்முகப் பிரியன் (47). ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு ஓட்டிச் சென்ற காா், பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கெங்கவல்லி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ் (54), அவரது உறவினா் சதீஷ் (32) ஆகியோா் மீது மோதியது. தொடா்ந்து, வேகமாகச் சென்ற காா், மறுபுறம் உள்ள காய்கறிக் கடை, கைப்பேசி கடைகளின் மீது மோதியது. இதில், கடைகளின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. கடைகளின் முன்புற அமைப்பும் சேதமடைந்தன.

இதுகுறித்த தகவலின்பேரில் தம்மம்பட்டி போலீஸாாா் விரைந்து சென்று, காயமடைந்த சிறப்பு உதவிஆய்வாளா் கோவிந்தராஜை மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையளித்து, தீவிர சிகிச்சைக்காக ஆத்தூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரது, உறவினா் சதீஸ் ராசிபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்துகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் காரை ஓட்டிச் சென்ற சண்முகப் பிரியன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments