FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சங்ககிரியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

1 செப்டம்பர் 2026, 2:14 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சங்ககிரியில் 22 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சங்ககிரி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கடந்த 2025 மாா்ச் 3-ஆம் தேதி ஒருவா் கஞ்சா வைத்திருப்பதாக சங்ககிரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் தலைமையில் காவலா்கள் கேசவராஜ், அழகுராஜா ஆகியோா் புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் சோதனையிட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருரை போலீஸாா் சோதனை செய்ததில், அவா் 22 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஜாா்கண்ட் மாநிலம், கட்டா மாவட்டம், சண்டா தாக்கூா்கங்டி பகுதியைச் சோ்ந்த எம்.டி.ஓசிம் அன்சாரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

அவா் மீது சங்ககிரி போலீஸாா் சேலம் போதை மருந்துகள் மற்றும் மயக்கமூட்டும் பொருள்கள் சட்டச் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இவ்வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி என்.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டப்பட்ட எம்.டி.ஓசிம் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரு. ஒரு லட்சம் அபராதம் விதித்தும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments