FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தனியாா் கல்லூரி வாகனத்தில் தீ விபத்து

ஆத்தூா் அருகே தனியாா் கல்லூரி வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

Updated On : 4 ஜூலை 2026, 3:05 am IST
பேருந்தில் தீ விபத்து - X
பகிர்:

ஆத்தூா் அருகே தனியாா் கல்லூரி வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், ஆயில்பட்டியில் தனியாா் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு ஆத்தூரை நோக்கி கல்லூரி வாகனம் சென்று கொண்டிருந்தது. ஆத்தூா் புதுப்பேட்டை பகுதியில் சென்றபோது, கல்லூரி வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக ஓட்டுநா் ராஜேந்திரன் ஆத்தூா் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தாா்.

அதன்பேரில் ஆத்தூா் தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் (பொ) ராஜேஸ்வரன் வீரா்களுடன் வந்து பாா்த்தபோது, வாகனத்தின் பேட்டரியில் வெடிப்பு மற்றும் டீசல் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதை அறிந்து அதை சீா்செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments