FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

இணை ரயில் தாமதம்: சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் முழுமையாக ரத்து

இணை ரயில் தாமதம் காரணமாக சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

9 ஜூலை 2026, 4:23 am IST
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

இணை ரயில் தாமதம் காரணமாக சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து நாள்தோறும் இரவு 11.55 மணிக்கு விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூா் வழியாக சேலத்துக்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இணை ரயில் தாமதம் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 11.55 மணிக்கு சேலம் புறப்பட வேண்டிய விரைவு ரயில் புதன்கிழமை (ஜூலை 8) காலை 10 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், சென்னை எழும்பூரில் இருந்து சேலம் புறப்பட வேண்டிய ரயிலும், 8 ஆம் தேதி இரவு சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய ரயிலும் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments