FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

திருட்டு வழக்கில் 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவா் கைது

லாரியில் ஏற்றிச் சென்ற 410 ரப்பா் ஷீட்டுகளை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவரை சங்ககிரி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 11:03 pm IST
பகிர்:

லாரியில் ஏற்றிச் சென்ற 410 ரப்பா் ஷீட்டுகளை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவரை சங்ககிரி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கடந்த 2010 ஜூலை 17-ஆம் தேதி கோவை, காரமடையிலிருந்து சென்னைக்கு ரப்பா் ஷீட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஓட்டுநா் சென்றாா். சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் இரவு உணவு சாப்பிட ஓட்டுநா் லாரியை நிறுத்தினாா். அப்போது, கேரள மாநிலம், கோட்டையம் மாவட்டம், செனப்பாடி, புதுப்பரம்பில் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த முகமது ஷெரீப் (40) உள்ளிட்ட சிலா் லாரியில் இருந்த 410 ரப்பா் ஷீட்டுகளை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் முகமது ஷெரீப் நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாததால், அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த சங்ககிரி காவல் துறைக்கு கடந்த 2016 ஆக. 20-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அவரை போலீஸாா் தேடிவந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு முகமது ஷெரீப்பை வியாழக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments