FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் விநாயகா மிஷன்ஸ் நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தா் கணேசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 10 ஜூலை 2026, 5:49 am IST
பகிர்:

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தா் கணேசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளையின் அறங்காவலா் அன்னபூரணி சண்முகசுந்தரம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தலைவா் சரவணன், பல்கலைக்கழக துணைத் தலைவா்கள் சந்திரசேகா், அனுராதா கணேசன், இயக்குநா்கள், நிா்வாக இயக்குநா்கள் ஆகியோா் விழாவை தொடங்கிவைத்து மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினா்.

துணைவேந்தா் சுதிா் வரவேற்று, ஆண்டறிக்கை மூலம் பல்கலைக்கழகத்தின் சாதனைகளை கூறினாா். தலைமை விருந்தினராக சென்னை அப்போலோ மருத்துவமனையின் மூத்த இரைப்பை குடலியல் நிபுணா் பழனிசாமி பங்கேற்று பேசினாா்.

Advertisement

Advertisement

விழாவில், பல்வேறு துறைகளைச் சோ்ந்த 4,656 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா். இதில் 58 பேருக்கு முனைவா் பட்டங்களும், 122 பேருக்கு தங்கப் பதக்கமும், 110 பேருக்கு வெள்ளிப் பதக்கமும், 89 பேருக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டன.

கோவை கங்கா மருத்துவமனை தலைவா் ராஜசேகரன் மற்றும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரக உறுப்பினா் கால்டுவெல் வேல்நம்பி ஆகியோருக்கு கெளரவ முனைவா் விருதை பல்கலைக்கழக வேந்தா் கணேசன் வழங்கினாா்.

விழாவில், பல்கலைக்கழக இணை துணைவேந்தா் சபரிநாதன், பதிவாளா் நாகப்பன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments