நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது பற்றி...
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் தங்கப் பதக்கங்களையும் வழங்குகிறார். இதில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்குவார் என்று முதலில் கூறப்பட்ட நிலையில் அதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே பின்னர் அனைவருக்கும் ஆளுநரே பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடங்கியது.
முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டு மூன்றாவதாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
ஆளுநர் கலந்துகொள்ளும் விழா என்பதால் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த விழாவை புறக்கணித்துள்ளார். அதேபோல இன்று முனைவர் பட்டம் பெறவிருந்த மகேஷ் குமார் அகர்வாலும் விழாவில் பங்கேற்கவில்லை.
"தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும். தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3 ஆவதாக பாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil Thai Vazhthu sung third at the Nellai University convocation ceremony
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.