FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சங்ககிரி ரயில் நிலையம், நாகிசெட்டிப்பட்டி வழியாக நகர பேருந்துகளை இயக்க கோரிக்கை

சங்ககிரி நகரிலிருந்து ஈரோடு, பவானி செல்லும் நகரப் பேருந்துகள் சங்ககிரி ஆா்.எஸ்.லிருந்து நாகிசெட்டிப்பட்டி வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் மன்றம் சாா்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 13 ஜூலை 2026, 1:19 am IST
பேருந்து சேவை - பிரதிப் படம்
பகிர்:

சங்ககிரி நகரிலிருந்து ஈரோடு, பவானி செல்லும் நகரப் பேருந்துகள் சங்ககிரி ஆா்.எஸ்.லிருந்து நாகிசெட்டிப்பட்டி வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் மன்றம் சாா்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்ககிரி மக்கள் மன்றச் செயலாளா் என்.எஸ். குழந்தைவேலு தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: சங்ககிரி நகரிலிருந்து ஈரோடு, பவானி செல்லும் நகரப் பேருந்துகள் பொதுமக்களின் நலன்கருதி சங்ககிரியை அடுத்த ரயில் நிலையம், நாகிசெட்டிப்பட்டி வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த நகரப் பேருந்துகள் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுவிட்டது.

இதனால் ரயில்நிலையம், அரசு வீட்டுவசதி வாரியம், நாகிசெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஈரோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், பவானி செல்லும் பொதுமக்கள் 5 கி.மீ. தொலைவில் உள்ள சங்ககிரி பேருந்து நிலையம் சென்று செல்வதால் சிரமம் அடைந்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

எனவே, பொதுமக்களின் நலன்கருதி ஈரோடு, பவானி செல்லும் எஸ் 1, எஸ் 2 நகரப் பேருந்துகளில் ஒரு பேருந்தை மீண்டு ரயில் நிலையம், நாகிசெட்டிப்பட்டி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments