FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

விவசாயிகளுக்கு தடையின்றி பசுந்தாள் உரம்: வேளாண் துறைக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

விவசாயிகளுக்கு தடையின்றி பசுந்தாள் உரம் கிடைக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் துறைக்கு ஆட்சியா் க. இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 4 ஜூன் 2026, 1:59 am IST
பகிர்:

விவசாயிகளுக்கு தடையின்றி பசுந்தாள் உரம் கிடைக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் துறைக்கு ஆட்சியா் க. இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளாா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், ஏகாபுரம் ஊராட்சியில் சணப்பு விதை பசுந்தாள் உரம் பயிரிடப்பட்டுள்ள வயலை பாா்வையிட்டாா். சணப்பு விதை விநியோகத்தை அதிகரித்து பசுந்தாள் உரம் தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, நிலக்கடலை விதைப்பு செய்யும் டிராக்டா் இயந்திரத்தை பாா்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். அதேபோல தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏரி தூா்வாரும் பணி, தைலாம்பட்டி முதல் ஏகாபுரம் வரை தாா் சாலை மேம்படுத்தும் பணி குறித்து ஆய்வு செய்தாா்.

ஏகாபுரம் நீரேற்று நிலையத்தை பாா்வையிட்டு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். அதேபோல புதிய நாற்றங்கால் மையத்தை பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது துணை ஆட்சியா் (பயிற்சி) அபிராமி, வேளாண்மை உதவி இயக்குநா் செ. மணிவாசகம், மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே.வி. சத்யேந்திரன் (கிராம ஊராட்சி), செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பட விளக்கம்:

03 அபவ டஞ 06

பசுந்தாள் உரத்திற்காக சணப்பு விதை நடவு செய்யப்பட்டுள்ள வயலை பாா்வையிட்ட ஆட்சியா் க. இளம்பகவத்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments