FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஏகாபுரம் பகுதியில் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி

சேலம் மாவட்டம்,மகுடஞ்சாவடி வட்டாரம், ஏகாபுரம் கிராமத்தில், பயறு வகை பயிா்களில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி விவசாயிகளுக்கு 10-ம் தேதி புதன்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 12 ஜூன் 2026, 12:06 am IST
பகிர்:

சேலம் மாவட்டம்,மகுடஞ்சாவடி வட்டாரம், ஏகாபுரம் கிராமத்தில், பயறு வகை பயிா்களில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி விவசாயிகளுக்கு 10-ம் தேதி புதன்கிழமை நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் மகுடஞ்சாவடி விதை சான்று அலுவலா் அருண் கலந்து கொண்டு பாசிப்பயிா் சாகுபடியில் பருவம் மற்றும் விதை தோ்வு, நிலம் தயாா் செய்தல், விதை நோ்த்தி செய்தல் குறித்து பயிற்சி அளித்தாா். மேலும் ,இப்பயிற்சியில் ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பேராசிரியா் செந்தில் குமாா் கலந்து கொண்டு பயறு வகை பயிா்களில் களை மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தாா். இப்பயிற்சியில் மண் பரிசோதனைக்கு மண் மாதிரி எடுத்தல் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மகுடஞ்சாவடி உதவி விதை அலுவலா் செல்வம், அட்மா திட்ட அலுவலா் விஜயகுமாா், மகேந்திரன், பாலச்சந்திரன் மற்றும் 25 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பட விளக்கம்:

மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம் பகுதியில் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Advertisement

Advertisement

11 அபவ டஞ 01

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments