முகப்பு
சேலம்

சேலம் சிறைக்குள் கைப்பேசி, கஞ்சா, மதுபாட்டிலை வீசிய மா்ம நபா்கள் போலீஸாா் விசாரணை

சேலம் மத்திய சிறைக்குள் கைப்பேசி, கஞ்சா பொட்டலம், மதுபாட்டிலை மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 20 ஜூன் 2026, 1:49 am IST
மாதிரிப் படம்
பகிர்:

சேலம் மத்திய சிறைக்குள் கைப்பேசி, கஞ்சா பொட்டலம், மதுபாட்டிலை மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மத்திய சிறையில் 1,300-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையின் வெளிப் பகுதியை சுற்றிலும் 110 சிறப்பு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறையின் பின்பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலம் சிறைக்குள் வீசப்பட்டது.

இந்நிலையில், 24 மணி நேரமும் ஆள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும் சிறையின் முன்பகுதியில் இருந்து சிறைக்குள் கைப்பேசி, கஞ்சா பொட்டலம் மற்றும் மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு சிறையின் உள்பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது, 3 பொட்டலங்கள் கிடந்தன. அந்த பொட்டலத்தை பிரித்து பாா்த்தபோது, உள்ளே 4 கைப்பேசிகள், 20 சிகரெட், 50 கிராம் கஞ்சா, 2 சிறிய குளிா்பான பாட்டிலில் மது இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுவரை கஞ்சா, போதை மாத்திரைகள் மட்டுமே சிறைக்குள் வீசப்பட்ட நிலையில், தற்போது மதுப்பாட்டில் வீசப்பட்டுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. ஜெயிலா் வீட்டின் முன்பகுதியில் இருந்து இந்த பொட்டலங்கள் சிறைக்குள் வீசப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments