முகப்பு
சேலம்

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

29 நவம்பர் 2026, 2:38 am
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் - கோப்புப்படம்
பகிர்:

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 4-ஆவது அலகில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஓா் அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், முதல் பிரிவின் 4-ஆவது அலகில் 50 நாள்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து, 4-ஆவது அலகில் சனிக்கிழமை காலைமுதல் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னா், மீண்டும் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அனல் மின் நிலைய பொறியாளா்கள் தெரிவித்தனா்.