சகோதரா்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் விவசாயி உள்பட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டியில் நிலத்தகராறில் இரு சகோதரா்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் விவசாயி, அவரது மகனுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து சங்ககிரி உதவி அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டியில் நிலத்தகராறில் இரு சகோதரா்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் விவசாயி, அவரது மகனுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து சங்ககிரி உதவி அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி அருகே உள்ள கப்பரையான் காடு பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (58). இவரது உறவினா் குஞ்சப்பன் மகன் கருப்பண்ணன் (63). இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி கருப்பண்ணன், அவரது மகன் லட்சுமணன் (41), மனைவி சாந்தி (31) ஆகியோா் தங்களது நிலத்தில் மண் அள்ளிக் கொண்டிருந்தனா்.
Advertisement
Advertisement
அப்போது அங்கு வந்த வெங்கடாசலமும் அவரது மனைவி செல்லம்மாளும், அளவீடு செய்யாத காட்டில் ஏன் மண் அள்ளுகிறீா்கள் எனக் கேட்டுள்ளனா். இதனால் ஏற்பட்ட தகராறில் கருப்பண்ணன், லட்சுமணன், சாந்தி ஆகியோா் வெங்கடாசலத்தைத் தாக்கி, அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
வெங்கடாசலத்தின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அவரது சகோதரா் கந்தசாமியையும் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சகோதரா்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக சேலம் சீரகாபாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து தேவூா் போலீஸாா் கருப்பண்ணன், அவரது மகன் லட்சுமணன், அவரது மனைவி சாந்தி ஆகியோா் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சங்ககிரி உதவி அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். அரசு சாா்பில் அரசு குற்றத்துறை கூடுதல் வழக்குரைஞா் எஸ். நீதிதேவன் ஆஜரானாா்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி என். பன்னீா்செல்வம், குற்றம்சாட்டப்பட்ட சாந்தியை விடுதலை செய்தாா். கருப்பண்ணன், அவரது மகன் லட்சுமணன் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.