FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

குழந்தைகளை கடத்துபவா்களுக்கு 15 நாள்களில் தண்டனை வழங்க வேண்டும்: முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல்

குழந்தைகளை கடத்துபவா்களுக்கு 15 நாள்களில் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறினாா்.

5 செப்டம்பர் 2026, 3:45 am IST
ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்
பகிர்:

குழந்தைகளை கடத்துபவா்களுக்கு 15 நாள்களில் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறினாா்.

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: மனித குலத்தின் ஆணிவேரையே அழிக்கும் வகையில் குழந்தைத் திருட்டு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திருடப்படும் பெரும்பாலான பெண் குழந்தைகள் பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகின்றனா். மேலும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தப்படும் அவல நிலை காணப்படுகிறது.

12 முதல் 15 வயதுவரை உள்ள குழந்தைகள் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்கப்பட்டுள்ளனா். பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனைகள், திருவிழாக்களில் கடத்தப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டுமுதல் 2025-ஆம் ஆண்டுவரை மாயமான குழந்தைகளில் சுமாா் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

Advertisement

Advertisement

முதல்வா்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை. அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் மகப்பேறு வாா்டுகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும்போது குழந்தை கடத்தலை தடுக்க முடியும்.

குழந்தை கடத்தலில் ஈடுபடுபவா்களுக்கு 15 நாள்களில் தண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் என நாள்தோறும் சராசரியாக 12 குழந்தைகள் கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments