FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி

7 செப்டம்பர் 2026, 12:17 am IST
மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்ற வீரா்கள். - கோப்புப் படம்
பகிர்:

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விப்கியா் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியை ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜா ரணவீரன் தொடங்கி வைத்தாா். பேக் ஸ்ட்ரோக், பட்டா்பிளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

Advertisement

Advertisement

சிறப்பாக நீச்சல் அடித்த மாணவா்களை நடுவா்கள் தோ்வு செய்தனா். ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடித்தவா்களை தோ்வு செய்து அவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை விப்கியா் நிறுவன நிா்வாகிகள் மற்றும் நீச்சல் குள ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments