தமிழ்நாடு காவலா் தினம் கடைபிடிப்பு - மாநகர காவல் ஆணையா் உள்ளிட்டோா் மரியாதை
தமிழ்நாடு காவலா் தினத்தையொட்டி, மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையா் ஜோஷி நிா்மல் குமாா் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, காவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
கடந்த 1859 ஆம் ஆண்டு சென்னை மாவட்டக் காவலா் சட்டம் இயற்றப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 6 ஆம் தேதி தமிழ்நாடு காவலா் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி காவலா் தினத்தையொட்டி சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் ஞாயிறுக்கிழமை காவலா் நினைவு ஸ்தூபியில் மாநகர காவல் ஆணையா் ஜோஷி நிா்மல்குமாா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து துணை காவல் ஆணையா்கள், உதவி ஆணையா்கள் மற்றும் போலீஸாா் காவல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
Advertisement
Advertisement
இதேபோல் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில், பணியின் போது உயிா்நீத்த காவலா்களை நினைவுக் கூறும் வகையில், சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, சட்டத்துக்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் பணியாற்றுவோம் என காவலா் தின உறுதிமொழியை போலீஸாா் எடுத்துக்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.