ஆதிக்க சக்தியாக மதிமுக உருவாகும்: வைகோ
திண்டுக்கல், அக். 8: தமிழகத்தில் மதிமுக விரைவில் ஆதிக்க சக்தியாக உருவெடுக்கும் என, மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மதிமுக மாவட்டச் செயலர் என். ச
திண்டுக்கல், அக். 8: தமிழகத்தில் மதிமுக விரைவில் ஆதிக்க சக்தியாக உருவெடுக்கும் என, மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மதிமுக மாவட்டச் செயலர் என். செல்வராகவன் மற்றும் 48 வார்டுகளுக்கான அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, வைகோ சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர், ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சுயமரியாதையை பெரிதாகக் கருதியதால்தான், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை. இதனால், மதிமுகவின் எதிர்காலம் முடிந்து போனதாக சிலர் கருதினர். ஆனால், அதிமுக வெற்றி பெறும் வகையில் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களில் 78 சதவீதம் பேர், மதிமுக நடத்தப்பட்ட விதம் சரியில்லை என்றும், கிடைத்த இடத்தைப் பெற்றுக் கொண்டு தேர்தலில் மதிமுக போட்டியிடாமல் இருந்தது சரியான முடிவுதான் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. இது குறித்து முதல்வர் தெரிவித்த கருத்து ஏற்புடையதாக இல்லை. பொதுச் சொத்துகளை பாதுகாப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சட்டப்பேரவையிலும் தெரிவித்துள்ளார். சொத்துகள் போனால் மீட்டுக் கொள்ளலாம். உயிர் போனால் மீட்க முடியாது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் கலவரத்துக்கு ஆதரவு தரக்கூடாது.
முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடும் இயல்பு, ஈழத் தமிழர்களுக்கான குரல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மதிமுகவை இளைஞர்கள் ஆதரித்து வருகின்றனர். இதுபோன்ற மௌன அலை தமிழகத்தில் வீசுகிறது. விரைவில் ஆதிக்க சக்தியாக மதிமுக உருவாகும் என்றார் வைகோ.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.