தேர்தல் நன்னடத்தை விதி: உசிலம்பட்டியில் ஆலோசனைக் கூட்டம்
உசிலம்பட்டி, அக். 8: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி சார்பில் தேர்தல் நன்னடைத்தை விதிகள் குறித்த ஆலோசûனைக் கூட்டம் நடைபெற்றது. பஜார் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவ
உசிலம்பட்டி, அக். 8: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி சார்பில் தேர்தல் நன்னடைத்தை விதிகள் குறித்த ஆலோசûனைக் கூட்டம் நடைபெற்றது.
பஜார் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்
கிருஷ்ணாநந்தா தலைமை வகித்தார். உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வில்லியம் சகாயராஜ், ஜெயசந்திரன், துரைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Advertisement
Advertisement
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்குப் பணம், இலவசப் பொருள்கள் வழங்கக் கூடாது.
கோயில் வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் செய்யக் கூடாது. யாரையும் குறிப்பிட்டோ,மனம் புண்படும்படியோ விமர்சித்து பேசக் கூடாது. மேலும் இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.
செலவு உச்சவரம்பு வார்டு உறுப்பினர்கள் ரூ.22,500, தலைவர் பதவிக்குப் போட்டியிடுவர்கள் ரூ.1,12,500. மாத இறுதியில் செலவுக் கணக்கை தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.