பலாத்காரம் செய்ததாக மாணவி புகார்: 3 பேர் கைது
திருப்பத்தூர், அக். 8: திருப்பத்தூரைச் சேர்ந்த நல்லமணி மகள், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பாலு மகன் சக்திவேல் (22). இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூற
திருப்பத்தூர், அக். 8: திருப்பத்தூரைச் சேர்ந்த நல்லமணி மகள், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பாலு மகன் சக்திவேல் (22). இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் ஒரு புகார் அளித்துள்ளார்.
கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சரத்குமார் (19), வெள்ளிக்கிழமை இரவு சக்திவேல் அழைத்து வரச் சொன்னதாகக் கூறி, என்னை காரில் அழைத்துச் சென்றார்.
Advertisement
Advertisement
திருப்பத்தூர் அருகே தெக்கூரில் வைத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சக்திவேல் வற்புறுத்தினார்.
மறுத்த எனக்கு போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து மயக்கமடையச் செய்து, என்னை பலாத்காரம் செய்தார்.
பின்னர் என்னை காரில் ஏற்றி அழைத்து வரும் போது வழியில் கார் பஞ்சரானது.
சக்திவேலின் மற்றொரு நண்பரான கலைதினேஷ், சரத்குமார் ஆகிய இருவரும் என்னை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து விட்டனர் என புகாரில் கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் சக்திவேல் உள்ளிட்ட மூவரையும் திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.