மாநிலத்தில் சிறந்த நகராட்சியாக ராஜபாளையத்தை மாற்றுவேன்: பா.ஜ. வேட்பாளர் உறுதி
ராஜபாளையம், அக். 8: ராஜபாளையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தந்து மாநிலத்தில் சிறந்த நகராட்சியாக ராஜபாளையத்தை மாற்றிக்காட்டுவேன் என நகர்மன்றத் தலைவர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளர் என்.எஸ்.ராமகி
ராஜபாளையம், அக். 8: ராஜபாளையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தந்து மாநிலத்தில் சிறந்த நகராட்சியாக ராஜபாளையத்தை மாற்றிக்காட்டுவேன் என நகர்மன்றத் தலைவர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளர் என்.எஸ்.ராமகிருஷ்ணன் (படம்) தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தொழில் வளர்ச்சியில் ராஜபாளையம் நகர் தமிழகத்தில் சிறந்து விளங்கினாலும் மக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் கடந்த 40 ஆண்டுகளில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டங்களையும் நகர்மன்றம் செய்துதரவில்லை.
Advertisement
Advertisement
மாவட்டம் முழுவதும் தாமிரபரணி குடிநீர் கிடைத்தாலும் ராஜபாளையம் நகர் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றதும் தனி பைப்லைன் மூலம் ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி குடிநீர் கொண்டு வருவேன். ராஜபாளையம் இரண்டாவது குடிநீர் தேக்கப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவேன்.
நான் வெற்றி பெற்றால் ராஜபாளையம் புது பஸ் நிலையத்தில் இருந்து கொல்லம் சாலைக்கு இணைப்புச் சாலை போடவும், புறவழிச் சாலை வசதியும் ஏற்படுத்தித் தருவேன்.
பி.ஏ.சி.ஆர். சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன். 42 வார்டுகளிலும் வாரம் ஒரு நாள் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தி குறைகளை உடனுக்குடன் தீர்ப்பேன். நகராட்சி சார்பில் துப்புரவுப் பணிகள், அனைத்து வார்டுகளிலும் தரமான சாலை வசதி போன்றவற்றை ஏற்படுத்தித் தருவேன்.
சிறந்த முறையில் நகர்மன்றக் கூட்டங்களை நடத்தி மத்திய, மாநில அரசுகள் நகர்நல வளர்ச்சிக்கு வழங்கும் நிதிகளைப் பெற்று சிறந்த நிர்வாகம் செய்து ராஜபாளையம் மக்களுக்கு உண்மையுடன் உழைப்பேன் என்றார் என்.எஸ்.ராமகிருஷ்ணன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.