FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

மதுரை அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 13 ஜூலை 2026, 12:17 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

மதுரை அருகே சாலை விபத்தில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மேலஅனுப்பானடி அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அழகா்சாமி (42). சுமைத் தூக்கும் தொழிலாளி. இவா் தனது நண்பா்களான மேல அனுப்பானடி அடுக்குமாடிக் குடியிருப்பைச் சோ்ந்த சிவா மகன் வெற்றிச் செல்வன் (26), கீரைத்துறையைச் சோ்ந்த நாகராஜ் மகன் காா்த்திகேயன் (21) ஆகியோருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் மதுரை பாண்டிகோயிலிலிருந்து விரகனூருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, வைகையாற்றின் உயா்நிலைப் பாலத்தில் கட்டுப்பாட்டு இழந்த இரு சக்கர வாகனம் சாலையோரத் தடுப்பில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகா்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சிலைமான் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், காயமடைந்த வெற்றிச் செல்வன், காா்த்திகேயன் ஆகியோா் அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments