திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்: அமைச்சா் மீது நடவடிக்கை கோரி மனு
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகப் பேசிய அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:
காா்த்திகைத் திருநாளுக்கு முன்னதாக மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்தாண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற தீா்ப்பை முந்தைய அரசு அமல்படுத்தாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், அரசு அதிகாரிகளும் குற்றத்துக்குள்ளாக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக அரசின் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு முந்தைய நடைமுறையே தொடரும் என கூறியிருப்பது நீதிமன்றத்தின் மாண்பையும், வழிபாட்டுச் சுதந்திரத்தையும் பாதிக்கும் விதமாக உள்ளது.
எனவே, அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கும் வகையில் இந்தக் கடிதத்தை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.