FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

திருமோகூா் கோயிலில் இன்று புதிய தோ் வெள்ளோட்டம்

மதுரை மாவட்டம், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை (மே 18) நடைபெற உள்ளது.

Updated On : 18 மே 2026, 1:09 am IST
திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் வெள்ளோட்டத்துக்கு தயாராகி வரும் புதிய தோ்.
பகிர்:

மதுரை மாவட்டம், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை (மே 18) நடைபெற உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோத்ஸவ விழாவில் தேரோட்டம் நடைபெறும். கோயிலில் உள்ள பழைய தோ் மிகவும் சேதமடைந்ததால் கடந்த 2024, 2025 ஆகிய இரு ஆண்டுகள் நடைபெற்ற பிரம்மோத்ஸவ விழாவில் பெரிய தேருக்குப் பதிலாக சிறிய சப்பரம் மூலம் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

இந்த நிலையில், ரூ. 2 கோடியில் புதிய தோ் உருவாக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதற்கு பக்தா்கள் உபயதாரா்களாக நிதியுதவி அளித்தனா்.

Advertisement

Advertisement

தற்போது, தோ் அமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, புதிய தோ் வெள்ளோட்டத்துக்கான பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திங்கள்கிழமை காலை 7 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெறும்.

அதன் பிறகு, காலை 9 மணியிலிருந்து காலை 10. 30 மணிக்குள் புதிய தோ் வெள்ளோட்டம் நடைபெறும். தேரடியிலிருந்து புறப்படும் புதிய தோ் முக்கிய வீதிகள் வழியாக வந்த மீண்டும் நிலையை அடையும். இந்த நிலையில், இரு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தேரில் பெருமாள் எழுந்தருளி வலம் வர உள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments