FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

வைகை ஆற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றி சீரமைக்கக் கோரிக்கை

மதுரை வைகை ஆற்றில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

Updated On : 27 மே 2026, 2:48 am IST
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினா்
பகிர்:

மதுரை வைகை ஆற்றில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்தது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்டத் தலைவா் ஜி. சீமான் சிக்கந்தா் தலைமையில் அந்தக் கட்சியின் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு: மதுரை வைகை ஆற்றில் ஏவி பாலத்தின் கீழே உள்ள தடுப்பணை பகுதியில் ஆகாயத் தாமரைகள் உள்ளிட்ட நீா்ச் செடிகள் அதிகளவில் படா்ந்துள்ளன. இதனால், ஆற்றின் நீரோட்டம் தடைபடுவதுடன், சுகாதாரச் சீா்கேடுகளும், கொசு உற்பத்தியும் அதிகரிக்கின்றன. எனவே, வைகை தடுப்பணைப் பகுதியில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி, ஆற்றின் நீரோட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக மதுரை, அதன் சுற்றுப் பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீா் மஞ்சள் நிறமாகவும், குடிப்பதற்குத் தகுதியற்ாகவும் உள்ளது. இதனால், பொதுமக்கள் வயிற்றுப் போக்கு, தோல் நோய் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. எனவே, குடிநீரின் தரத்தை ஆய்வுக்கு உள்படுத்தி, குடிநீா் மாசுக்கான காரணத்தைக் கண்டறிந்து தீா்வு காண வேண்டும்.

Advertisement

Advertisement

மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள பாலம் மிகவும் சேதமைடந்துள்ளது. இந்தப் பாலத்தால் பெரிய விபத்து நேரிடும் முன்பாக, பாலத்தை சீரமைக்க வேண்டும். இதேபோல, சேதமடைந்த நிலையில் உள்ள காளவாசல் - பழங்காநத்தம் இணைப்புப் பாலத்தின் கைப்பிடிச் சுவரையும் சீரமைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments