FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள் நியமனம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 15ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இது குறித்து, திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.ந. ஹரிஹரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

Advertisement

Advertisement

மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சுமார் 17 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 1095 மையங்களில் 2039 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. மாற்றுத் திறனாளிகள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அதன்படி, மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டுக்காக 375 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஒவ்வொரு தொகுதியிலும் மகளிருக்கு சிறப்பு வாக்குச் சாவடியும், 4 முன்மாதிரி மையம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல், சிறுமலை, கரந்தமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் 105 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில், வெள்ளகவி, பஞ்சம்பட்டி, சின்னூர், பெரியூர் உள்ளிட்ட 5 மையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லவும், எடுத்து வரவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 0451-2461930 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

அதைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சியினர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அடிப்படை வசதிகளுக்கு புகார் பெட்டி:   தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்கள் நடைபெறாது. ஆனால், புதிய வசதிகளுக்கான கோரிக்கை நீங்கலாக, அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்படும்.

சட்டப்பேரவை தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்கள் விவரம்

திண்டுக்கல் - கோட்டாட்சியர் மனோகரன்

பழனி - சார் ஆட்சியர் வினீத்

ஒட்டன்சத்திரம் - கலால் உதவி ஆணையர் குமார்

ஆத்தூர் - சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அலுவலர் கீதா

நிலக்கோட்டை - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலர் சேதுராமன்

நத்தம் - ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தாதேவி

வேடசந்தூர் -  மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments