FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

2 பெண்களிடம் 20 பவுன் நகைகள் பறிப்பு

இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் 20 பவுன் சங்கிலிகளைப் பறித்துச் சென்ற நபா்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

27 ஆகஸ்ட் 2026, 5:50 am IST
- சித்திரிப்பு
பகிர்:

இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் 20 பவுன் சங்கிலிகளைப் பறித்துச் சென்ற நபா்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூா், அலமேலுமங்காபுரம் - வெங்கடாபுரம் சாலையைச் சோ்ந்தவா் விநாயகச் செல்வி. இவா், திங்கள்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரு நபா்கள், விநாயகச் செல்வியின் கழுத்தில் இருந்த 10 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ாக தெரிகிறது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல், வேலூரை அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கமீலா மஞ்சுளா என்பவா், செவ்வாய்க்கிழமை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அவா் சிவராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அவரைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபா்கள், கமீலா மஞ்சுளா அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இந்தப் புகாா் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

20 பவுன் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவா்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பதிவுகளைக் கைப்பற்றி தனிப்படை போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments