அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சிறப்பாக பணிபுரிந்த 29 பேருக்கு பரிசு
திண்டுக்கல் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 29 பேருக்கு, புதன்கிழமை பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 29 பேருக்கு, புதன்கிழமை பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின், திண்டுக்கல் மண்டல தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல பொது மேலாளர் சி.ராஜேஸ்வரன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
விழாவில், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற பணியாளர்களின் குழந்தைகள், பி.கே.சக்திவேல் தங்கபாண்டியன், ஏ.அபர்ணா, யு.ஹரிஸ்பாண்டி மற்றும் கே.மோகனபிரசாத், எஸ்.எம்.புவனேஸ், வி.சினேகா ஆகியோருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பேருந்து இயக்கத்தின்போது டீசலை சிக்கனமாகப் பயன்படுத்திய திண்டுக்கல் மண்டலத்தைச் சேர்ந்த 12 ஓட்டுநர்கள், அதிக வருவாய் ஈட்டிய 12 நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர், அலுவலக மேற்பார்வையாளர் உள்ளிட்ட 29 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், 12 ஓட்டுநர்கள், 34 நடத்துநர்களுக்கு பணி நிரந்தத்துக்கான ஆணையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் கோபாலகிருஷ்ணன், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.