கொடைக்கானலில் பள்ளி மாணவர்களுக்கு தடகளப் போட்டி
கொடைக்கானலில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றன.
கொடைக்கானலில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றன.
பழனி கல்வி மாவட்டம் உள்ளடக்கிய கொடைக்கானல் டி பிரிவு குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
இப்போட்டியில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 27 பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை கொடைக்கானல் மின்வாரியத்துறை உதவிபொறியாளர் மேத்யூ தொடங்கி வைத்தார். பாம்பார்புரம் புனித தெரசாள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மேரி முன்னிலை வகித்தார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் 100 மீ., 200 மீ., 400 மீ., 800.மீ ஓட்டம் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.