FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒட்டன்சத்திரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
        ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு தும்மிச்சம்பட்டி பிரிவில் இருந்து சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் ஏராளமான கிடுகு மற்றும் வியாபாரக் கடைகள் உள்ளன. இதனால், கிடுகு கடைக்கு மூங்கில் மற்றும் மரம் ஏற்றிக்கொண்டு வரும் கனரக வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
   மேலும், இச்சாலையிலுள்ள எலக்ட்ரானிக் கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். 
        இதனால், இச்சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments