குடிநீர் கோரி தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் கோரி பழனி அருகேயுள்ள தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
குடிநீர் கோரி பழனி அருகேயுள்ள தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஈசக்காம்பட்டி. இங்கு கடந்த 35 நாள்களாக குடிநீர் விநியோகம் இல்லையாம். மேலும், அங்குள்ள ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் வற்றியதால் கிராம மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் காலிக்குடங்களுடன் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போதுள்ள ஆழ்குழாய் கிணற்றின் மோட்டாரை மற்றொரு குடிநீர் இணைப்புடன் சேர்த்து தற்காலிகமாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று புதிய ஆழ்குழாய் அமைக்கப்படும் எனவும் உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.