FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாலத்தில்  பைக் மோதி இளைஞர் சாவு

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே திங்கள்கிழமை இரவு 3 இளைஞர்கள் சென்ற இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே திங்கள்கிழமை இரவு 3 இளைஞர்கள் சென்ற இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
எரியோடு அடுத்துள்ள கோம்பை மெத்தப்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி மகன் சின்னமணி (21). இவர் தனது நண்பர்களான கோவிலூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் சரவணன் ஆகியோருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் கோம்பை நோக்கி வந்துள்ளார்.
கோம்பை சாலையில் ரெட்டியப்பட்டி அடுத்துள்ள பாலத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், சின்னமணி உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதில், சின்னமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த சரவணன் மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து எரியோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments