FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நாளை தனியார் வேலைவாய்ப்புச் சந்தை

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் வேலைவாய்ப்புச் சந்தை வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது.

Updated On : 7 ஜூன் 2018, 7:03 am IST
பகிர்:

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் வேலைவாய்ப்புச் சந்தை வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது.
 இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொ) அ.நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளதாவது:
 படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில், தனியார் துறை வேலைவாய்ப்புச் சந்தை மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்க விரும்பும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தங்களின் சுயவிவரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளி நகல் (ஜெராக்ஸ்) ஆகியவற்றுடன் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) காலை 11 மணிக்கு நேரில் வர வேண்டும். அதேபோல், தனியார் துறை வேலையளிப்போர் தங்களுக்கு தேவையான பணியாளர்களின்  விவரத்தினை திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 0451-2461498 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
 இந்த வேலை வாய்ப்புச் சந்தையின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments