பழனி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவர் நியமிக்க கோரிக்கை
பழனி அரசு மருத்துவமனையில் நிரந்தர மனநல மருத்துவரை நியமிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழனி அரசு மருத்துவமனையில் நிரந்தர மனநல மருத்துவரை நியமிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பகத்சிங், மாவட்ட துணைச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் தங்கவேல் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் பேசுகையில், பழனி அரசு மருத்துவமனையில் நிரந்தர மனநல மருத்துவர் இல்லாத நிலை நீடிக்கிறது. மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை காலை 11 மணிமுதல் 12 மணிவரை மட்டுமே அதாவது மாதத்தில் ஒரு மணிநேரம் மட்டுமே மனநல மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆகவே, தமிழக அரசு பழனி அரசு மருத்துவமனைக்கு நிரந்தரமாக மனநல மருத்துவரை நியமித்திட வேண்டும் என்றார். இதனை கூட்டத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.