FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் கைப்பந்து போட்டி

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி கைப்பந்து போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 மே 2018, 5:23 am IST
பகிர்:

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி கைப்பந்து போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட விளாயாட்டுத் துறை சார்பில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கொடைக்கானல், பள்ளங்கி, காந்தி கிராமம், சின்னாளப்பட்டி ,கோவில்பட்டி ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆண்கள் போட்டியில் கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த அட்டுவம்பட்டி அணியினர் முதலிடமும், காந்தி கிராமத்தைச் சேர்ந்த அணியினர் இரண்டாவது இடமும் பெற்றனர். முதலிடம் பெற்ற அணியினருக்கு ரூ.2,600-ம், இரண்டாம் இடம் பெற்ற அணியினருக்கு ரூ.1,800-ம் பரிசாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் காந்தி கிராமத்தைச் சேர்ந்த அணியும்,சின்னாளப்பட்டியைச் சேர்ந்த அணியும் விளையாடின. இதில் காந்தி கிராமம் அணி முதலிடமும், சின்னாளப் பட்டி அணியினர் இரண்டாம் இடமும் பெற்றனர். முதலிடம் பெற்ற அணியினருக்கு ரூ.2,600-ம், இரண்டாம் இடம் பெற்ற அணியினருக்கு ரூ.1,800-ம் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு கொடைக்கானல் சன்பில்டர்ஸ் நிறுவனர் டி.பி.ரவீந்திரன் பரிசுகளை வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சௌந்தரராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments