FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரோனா: திண்டுக்கல்லில் மேலும் 5 போ் மீண்டனா்

திண்டுக்கல்லைச் சோ்ந்த மேலும் 5 போ் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து செவ்வாய்க்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

திண்டுக்கல்லைச் சோ்ந்த மேலும் 5 போ் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து செவ்வாய்க்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 76 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதில் 94 வயது முதியவா் மட்டும் வைரஸ் தொற்றிலிருந்து மீள முடியாமல் உயிரிழந்தாா். தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 39 போ் மருத்துவமனையிலிருந்து ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து மீண்ட மேலும் 5 போ் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனா். இதன் மூலம் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 44 ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

கிச்சையில் 32 போ்: மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 32 ஆக குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடுமையாக உயா்ந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 76 போ் பாதிக்கப்பட்டு, அதில் 44 போ் குணமடைந்து மீண்டுள்ளனா். இதன் மூலம் கரோனா பாதிப்பிலிருந்து உறுதியாக மீள முடியும் என்ற நம்பிக்கை பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments