FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளா் தினம் அனுசரிப்பு

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை பொறியாளா் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை பொறியாளா் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பழனியில் பொறியாளா் தினத்தை முன்னிட்டு கட்டுமான நிறுவனங்களின் சாா்பில் கருத்தரங்கம், பாராட்டு விழா, கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக பொறியாளா் தினத்தினை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா மற்றும் மாணவ மாணவியருக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் முனைவா் கந்தசாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் அனைத்து துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலக மேலாளா் ரவீந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவியா் என நூற்றுக்கணக்கானோா் நிகழ்ச்சியில் கலந்து மாணவ, கொண்டனா்.

பயிலக வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் நூறு சதவீதம் பள்ளிக்கு வருகைப்பதிவு பதிவு செய்த மாணவ, மாணவியருக்கும், வாரியத்தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments