FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோதத் திருவிழா!

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோதத் திருவிழா நடைபெற்றது. இதில், நள்ளிரவில் உருண்டை சோறுடன் கூடிய கிடாக்கறி விருந்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 8:47 am IST
நள்ளிரவில் உருண்டை சோறுடன் கூடிய கிடாக்கறி விருந்தில் கலந்துகொண்ட ஆண்கள்
பகிர்:

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது. இதில், நள்ளிரவில் உருண்டை சோறுடன் கூடிய கிடாக்கறி விருந்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாதசிறுகுடியில் பொன்னர் சங்கர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டைச் சோறுடன் கூடிய கறி விருந்து திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் பல நூறு ஆண்டுகளாக இத்திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு இவ்விழா நள்ளிரவு தொடங்கிய திருவிழாவில் ஏராளமான ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 101 ஆடுகளை சாமிக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னர் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆடுகளை உரித்து சுத்தம் செய்து பின்னர் சமைத்தனர். சமையல் அனைத்தும் செய்த பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு பொன்னர் சங்கர் சாமிக்கு படைக்கப்பட்ட உருண்டை சாதத்தை மின் விளக்கை அணைத்த பின்னர் வானை நோக்கி எரிந்து பின்னர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்தாக பரிமாறப்பட்டது.

நள்ளிரவில் நடைபெற்ற இந்த வினோத திருவிழாவில் இதில் நத்தம்,குட்டுபட்டி, பாதசிறுகுடி, குமரபட்டி, புதூர்,குட்டூர்,மாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்.

திருவிழாவில் பங்கேற்ற ஆண்களுக்கு விருந்து பரிமாற தயாரான உருண்டைச்சோறு
திருவிழாவில் பங்கேற்ற ஆண்களுக்கு விருந்து பரிமாற தயாரான உருண்டைச்சோறு
தயாராகும் உணவு
திருவிழாவில் பங்கேற்ற ஒரு பகுதியினர்
summary

A unique festival attended only by men near Natham!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments