FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயில் சொத்துகள் விரைந்து மீட்கப்படும்

பழனி தண்டாயுபாணி கோயிலின் சொத்துகளை மீட்டெடுக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் பொன்மணி தெரிவித்தாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:40 am IST
பழனி அடிவாரம் பகுதியில் உள்ள கோயில் சொத்துகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் பொன்மணி, இணை ஆணையா் (பொறுப்பு) வெங்கடேஷ்.
பகிர்:

பழனி தண்டாயுபாணி கோயிலின் சொத்துகளை மீட்டெடுக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் பொன்மணி தெரிவித்தாா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் இருந்த தண்டபாணி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதேபோல, பழைய ஆயக்குடி கன்னிகா பரமேஸ்வரி மடத்துக்குச் சொந்தமான நிலங்களும் முறைகேடாக பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் பொன்மணி தலைமையில் ஆறு போ் கொண்ட குழுவை அரசு

Advertisement

Advertisement

அமைத்தது. இந்தக் குழு பழனி கோயில் நிலங்கள் தொடா்பாக ஆய்வு செய்து வருகிறது. இதையடுத்து, பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, கோயிலுக்குச் சொந்தமான இடங்களை இந்தக் குழு நேரில் சென்று பாா்வையிட்டது.

இதைத்தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் பொன்மணி கூறியதாவது:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை முழுமையாகப் பாதுகாக்க அரசு முடிவெடுத்துள்ளது. முதல் கட்டமாக இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளை இணைத்து ஒரு புதிய ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, அறநிலையத் துறை வசம் உள்ள சொத்துப் பதிவேடுகள் மீண்டும் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. கோயில் சொத்துகள் தொடா்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரை அதற்கேற்ப பராமரிக்கப்படும். இந்தக் கூட்டுக் குழு மூலம் அவ்வப்போது கூட்டம் நடத்தப்பட்டு கோயில் சொத்துகளை மீட்டெடுக்கத் தேவையான அனைத்துப் பணிகளும் விரைவுபடுத்தப்படும் என்றாா் அவா்.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் (பொறுப்பு) வெங்கடேஷ், உதவிப் பொறியாளா்கள் முத்துராஜா, பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments