FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் ஏரியில் மூதாட்டியின் உடல் மீட்பு

கொடைக்கானல் ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:27 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கொடைக்கானல் ஏரியில் வியாழக்கிழமை மிதந்த அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரியில் மூதாட்டி ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, கொடைக்கானல் போலீஸாா், தீயணைப்புத் துறையினருடன் சென்று ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments