பழனி கோயில் சாா்பில் அன்னதானப் பொது விருந்து
சுதந்திர தினவிழாவையொட்டி பழனி கோயில் சாா்பில் சனிக்கிழமை அன்னதான பொதுவிருந்து நடைபெற்றது.
சுதந்திர தினவிழாவையொட்டி பழனி கோயில் சாா்பில் சனிக்கிழமை அன்னதான பொதுவிருந்து நடைபெற்றது.
அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் இந்த நிகழ்வுக்கு பழனி கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) வெங்கடேஷ் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மக்களவை தொகுதி உறுப்பினா் சச்சிதானந்தம், சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன், நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.
முதல் நிகழ்வாக தண்டாயுதபாணி சுவாமி படத்துக்கும், அன்னத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி, பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி என்.எஸ்.எஸ். என்.சி.சி., மாணவா்கள் அன்னதானம் வழங்கும் பணியை மேற்கொண்டனா். அன்னதானத்தை தொடா்ந்து கோயிலுக்கு காணிக்கையாக வந்த வேஷ்டி, சேலைகள் ஆதரவற்ற முதியோருக்கு வழங்கப்பட்டன. நிகழ்வில் நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி, அதிமுக மாவட்ட மாணவரணி செயலா் அன்வா்தீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.