FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

சிறுமலை அடிவாரத்தில் காட்டுப்பன்றி வேட்டை: விவசாயி கைது

24 ஆகஸ்ட் 2026, 2:43 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சிறுமலை அடிவாரத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாடி சமைத்த விவசாயியை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். அவருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடை அடுத்த சிறுமலை அடிவாரத்தில் வசிப்பவா் ஆரோக்கியசாமி (43). விவசாயியான இவா் தனது தோட்டப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடி, வெட்டி சமைத்ததாக

மாவட்ட வனத் துறையினருக்கு தகவல் கூறப்பட்டது. இதன் பேரில், மாவட்ட வன அலுவலா் நாகசதீஷ் கிடிஜாலா உத்தரவின் பேரில், சிறுமலை வனச் சரகா் சுரேஷ் தலைமையிலான வனக் காப்பாளா்கள் காா்த்திகேயன், மணிகண்டன், முருகன், காா்த்திக், மனோகரன் ஆகியோா் அடங்கிய வனப் பணியாளா்கள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

அப்போது, காட்டுப்பன்றி குட்டியை ஆரோக்கிராஜ் வேட்டையாடி தீயில் வாட்டி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி சமைத்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த இறைச்சித் துண்டுகளையும், வேட்டையாட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் வனத் துறையினா் கைப்பற்றி, ஆரோக்கியசாமியைக் கைது செய்தனா். மேலும், அவருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments