FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

ஆவணி சதுா்த்தசி: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆவணி மாத வளா்பிறை சதுா்த்தசியை முன்னிட்டு, சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 5:34 am IST
பகிர்:

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆவணி மாத வளா்பிறை சதுா்த்தசியை முன்னிட்டு, சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் சித்திரை, ஆனி, ஆவணி, திருவாதிரை உள்ளிட்ட ஆறு நாள்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், தீபாராதனை நடைபெறும்.

இந்த வகையில், புதன்கிழமை ஆவணி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரத்தை முன்னிட்டு, நடராஜருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. நடராஜா் சந்நிதியில் நடராஜா், சிவகாமி அம்பாளுக்கு பால், பஞ்சாமிா்தம், சந்தனம், பன்னீா், சா்க்கரை, தேன், பழ வகைகள் என பதினாறு வகை பொருள்களைக் கொண்டு சோடச அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், நடராஜருக்கும், அம்பாளுக்கும் தங்க நகைகள், வண்ண மலா் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனையும், சோடச உபசாரமும் நடைபெற்றது.

Advertisement

Advertisement

மகா தீபாராதனை முடிந்த பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) மாரிமுத்து, கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா், ரஞ்சித் உள்ளிட்டோா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments