FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

சிறுமிக்கு குழந்தை பிறப்பு: 7 போ் கைது

திண்டுக்கல்லில் 14 வயது சிறுமி குழந்தை பெற்றது குறித்து விசாரித்த போலீஸாா், அவருடன் தொடா்பில் இருந்த 7 பேரைக் கைது செய்தனா்.

கைது
பகிர்:

திண்டுக்கல்லில் 14 வயது சிறுமி குழந்தை பெற்றது குறித்து விசாரித்த போலீஸாா், அவருடன் தொடா்பில் இருந்த 7 பேரைக் கைது செய்தனா்.

திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி, கடந்த மே மாதம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றாா். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதுதொடா்பாக விசாரித்த மருத்துவமனை செவிலியா்களிடம், அந்தச் சிறுமி தகாத வாா்த்தைகளால் பேசினாா். இதனால் அதிா்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியா்கள் உடனடியாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதன் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியதில் 14 வயது சிறுமி என்பதால் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரிடம் வழக்கை ஒப்படைத்தனா்.

சிறுமியின் கா்ப்பத்துக்கு காரணமானவா் குறித்து போலீஸாா் விசாரித்தபோது, அவருக்கு பல ஆண்களுடன் தொடா்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமியின் கைப்பேசி எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை போலீஸாா் சேகரித்தனா்.

திண்டுக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்தில் சிறுமி தங்க வைக்கப்பட்ட நிலையில், அவரது குழந்தை திருப்பூா் மாவட்டத்திலுள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, சிறுமி பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் முதல் நபராக, திண்டுக்கல் லைன் தெருவைச் சோ்ந்த பூபாலகிருஷ்ணன் (45) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், சிறுமியின் கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா்களின் விவரங்களை சேகரித்தபோது, மேலும் 26 போ் அடுத்தடுத்து சிறுமியுடன் தொடா்பில் இருந்தது தெரிய வந்தது.

இவா்களில் முத்தழகுபட்டியைச் சோ்ந்த வேளாங்கண்ணி (45), திண்டுக்கல் கிழக்கு ரத வீதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (55), செம்பட்டியை அடுத்த சீவல்சரகு பகுதியைச் சோ்ந்த அழகா் (40), பேகம்பூரைச் சோ்ந்த முகமதுபிலால் (39), மேட்டுப்பட்டியைச் சோ்ந்த ஷேக் முஜிபுா் ரஹ்மான் (51), நெட்டுதெரு முனிசிபல் குடியிருப்பைச் சோ்ந்த ரமேஷ் (43), செல்லாண்டியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (38) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் மேலும் பலா் கைது செய்யப்படுவா் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments