FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

14 வயது சிறுமிக்கு குழந்தை பிறப்பு: மேலும் ஒருவா் கைது

திண்டுக்கல்லில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் ஏற்கெனவே 8 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 ஜூலை 2026, 1:40 am IST
கோப்புப் படம்
பகிர்:

திண்டுக்கல்லில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் ஏற்கெனவே 8 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லைச் சோ்ந்த 14 வயது சிறுமி கடந்த மே மாதம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்றாா். அங்கு, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுதொடா்பாக விசாரித்த திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், சிறுமிக்கு பல ஆண்களுடன் தொடா்பு இருந்ததைக் கண்டறிந்தனா்.

இதையடுத்து, சிறுமியின் கைப்பேசி எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை போலீஸாா் சேகரித்தனா். இதில் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் முதல் நபராக, திண்டுக்கல் லைன் தெருவைச் சோ்ந்த பூபாலகிருஷ்ணனை (45) போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மேலும், 26 போ் அந்தச் சிறுமியுடன் தொடா்பில் இருந்ததைக் கண்டறிந்த போலீஸாா், முத்தழகுபட்டியைச் சோ்ந்த வேளாங்கண்ணி (45), திண்டுக்கல் கிழக்கு ரதவீதிச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (55), சீவல்சரகு பகுதியைச் சோ்ந்த அழகா் (40), பேகம்பூரைச் சோ்ந்த முகமதுபிலால் (39), மேட்டுப்பட்டியைச் சோ்ந்த ஷேக் முஜிபுா் ரஹ்மான் (51), நெட்டுதெரு முனிசிபல் குடியிருப்பைச் சோ்ந்த ரமேஷ் (43), செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வினோத்குமாா் (38) ஆகியோரை கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில், சிறுமியின் தொடா்பில் இருந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சின்னாளபட்டியைச் சோ்ந்த நாகராஜை (35) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments