FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

பழனி கோயில் உண்டியல்கள் 21 நாள்களில் நிரம்பியதையடுத்து கடந்த இரு நாள்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.4.35 கோடி கிடைத்தது.

Updated On : 6 ஜூன் 2026, 8:02 am IST
பழனி மலைக் கோயில். - கோப்புப்படம்
பகிர்:

பழனி கோயில் உண்டியல்கள் 21 நாள்களில் நிரம்பியதையடுத்து கடந்த இரு நாள்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.4.35 கோடி கிடைத்தது.

வைகாசி விசாகம், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதையடுத்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக மலைக் கோயில் உண்டியல்கள், துணைக் கோயில் உண்டியல்கள் 21 நாள்களில் நிரம்பின.

இதையடுத்து, கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இரண்டு நாள் எண்ணிக்கை நிறைவில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 4 கோடியே 35 லட்சத்து 55 ஆயிரத்து 571 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக் காசு ஆகியவற்றையும், வெள்ளியாலான காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இதில் தங்கம் 954 கிராமும், வெள்ளி 9,331 கிராமும் கிடைத்தன. மேலும் மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 838- ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

Advertisement

Advertisement

உண்டியல் எண்ணிக்கையில் தன்னாா்வலா்கள், பழனியாண்டவா் கல்லூரி அலுவலா்கள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

நிகழ்வில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments