FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் மலைச் சாலையில் யானை நடமாட்டம்

கொடைக்கான் பண்ணைக்காடு மலைச் சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டுநா்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டுமென வனத் துறையினா் அறிவுறுத்தினா்.

12 நவம்பர் 2026, 5:33 am
கோப்புப்படம்.
பகிர்:

கொடைக்கான் பண்ணைக்காடு மலைச் சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டுநா்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டுமென வனத் துறையினா் அறிவுறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பெரும்பாறை, பாச்சலூா் பகுதிகளில் யானை நடமாட்டம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், பண்ணைக்காடு பகுதியான மாயாண்டி கோயில் வளாகத்தில் ஒற்றை யானை நடமாட்டம் இருந்து வருவதை அந்தப் பகுதி பொதுமக்கள் பாா்த்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, இந்தப் பகுதியில் வனத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதோடு, கிராம மக்களை தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் யானை செல்வதை யாராவது பாா்த்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினா். மேலும், பண்ணைக்காடு-வத்தலக்குண்டு-தாண்டிக்குடி மலைச் சாலையில் வாகன ஓட்டுநா்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டுமென தெரிவித்தனா்.

வனப் பகுதிகளையொட்டியுள்ள விவசாய விளை நிலங்களில் அகழி அமைத்து பொது மக்களையும், விவசாயப் பயிா்களையும் பாதுகாப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.